நீலகிரியில் பரபரப்பு: பள்ளி வளாகத்தில் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நீலகிரியில் பரபரப்பு: பள்ளி வளாகத்தில் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தை

நீலகிரியில் பரபரப்பு: பள்ளி வளாகத்தில் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த நாய்களை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 10-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, அங்கு இருந்த மூன்று நாய்களைத் தாக்கி வேட்டையாட முயன்றது. பின்னர், ஒரு நாயைக் கவ்விக்கொண்டு அங்கிருந்து சென்றது. சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் யாரும் அங்கு இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிறுத்தை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து நாய்களை வேட்டையாடிய காட்சி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, சிறுத்தையை விரைவாகக் கண்டறிந்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பள்ளி நிர்வாகம் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்து நாயை வேட்டையாடிச் சென்ற சம்பவத்தால், அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர்.