நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள், தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வாங்க ரூ.4,106 கோடியில் ஒப்பந்தம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள், தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வாங்க ரூ.4,106 கோடியில் ஒப்பந்தம்

நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள், தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வாங்க ரூ.4,106 கோடியில் ஒப்பந்தம்

இந்திய விமானப்படைக்கான ஜிசாட்-7சி (GSAT-7C) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் கடற்படைக்கான நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மொத்தம் ரூ.4,106 கோடி மதிப்பில் இரண்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதில், ரூ.2,563 கோடி மதிப்பில் ஜிசாட்-7சி செயற்கைக்கோளை வாங்குவதற்காக, பெங்களூருவைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ஒப்பந்தம் செய்தது. முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்படும் இந்தச் செயற்கைக்கோள், பாதுகாப்பான மற்றும் தடையற்ற தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 'வருணாஸ்திரா' நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ரூ.1,543 கோடியில் கொள்முதல் செய்ய, ஐதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஏவுகணைகள், கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தால் (Naval Science and Technological Laboratory) உள்நாட்டிலேயேதயாரிக்கப்பட்டவை. இந்தியக் கடற்படைக் கப்பல்களில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கும் திறன் இவற்றுக்கு உள்ளது. இதன் மூலம் கடற்படையின் போர்த்திறன் மேலும் வலுப்பெறும் என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தற்சார்பு இந்தியா இலக்கை நோக்கிய பயணத்தில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இந்த இரண்டு ஒப்பந்தங்களும் முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளரும், கொள்முதல் பிரிவின் தலைமை இயக்குநருமான அன்பரசு முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.