நில அபகரிப்பு புகார்: தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Jul 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Jul 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நில அபகரிப்பு புகார்: தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு

நில அபகரிப்பு புகார்: தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு

நில அபகரிப்பு தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், அவரது உதவியாளர் ஜெய்சங்கர் மற்றும் தொடர்புடைய அதிகாரி ஒருவருக்கு எதிராக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரில், 2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் தேர்தல் பணிமனை அமைப்பதற்காக குத்தகைக்கு வழங்கப்பட்ட சுமார் 5,500 சதுர அடி நிலம், ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகையும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட மனுவைத் தொடர்ந்து, போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலத்தின் உரிமை, குத்தகை ஒப்பந்த விவரங்கள் மற்றும் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.