நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் சரிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் சரிவு

நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்து வந்தது. இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கொள்முதல் விலை 540 காசுகளாக குறைந்துள்ளது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், அசைவ உணவு உட்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முட்டை விலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டையின் விலை, இன்று 20 காசுகள் சரிவை சந்தித்துள்ளது.