நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை வரவு? தமிழக அரசு பரிசீலனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை வரவு? தமிழக அரசு பரிசீலனை

நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை வரவு? தமிழக அரசு பரிசீலனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகையை முதல் வாரத்திலேயே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், அதற்கு முன்பே உரிமைத்தொகையை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தீபாவளி செலவுகளுக்கு இந்தத் தொகை பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே பணத்தைச் செலுத்த அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பொதுவாக மாதத்தின் முதல் நாளில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் நிலையில், அதே வாரத்தில் மகளிர் உரிமைத்தொகையையும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. இதற்குத் தேவையான நிதி உரிய காலத்தில் அரசு கருவூலத்துக்கு வந்து சேருமா என்பதையும் அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.