நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு

நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வரும் நவம்பர் 15-ந்தேதி முதல் பணிநேரத்தில் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சீருடையின் நிறங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஊழியர்களுக்கு சீருடை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளருக்கும் ஆண்டுக்கு 3 செட் சீருடைகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சீருடைக்கான துணி கொள்முதல், அளவு எடுத்தல், தைத்தல் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, சீருடைக்கான தொகை வழங்கப்படும் முறையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, துணி மற்றும் தையல் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக ஒரு செட் சீருடைக்கு ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு 3 செட்களுக்கு ஒரு பணியாளருக்கு மொத்தம் ரூ.6,000 வழங்கப்படும். சீருடையின் நிறங்களும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேற்பார்வையாளர்களுக்கு இளம் நீல நிற சட்டையும், கடற்படை நீல நிற பேண்டும் வழங்கப்படும். விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு இளம்பழுப்பு நிற சட்டையும், கரும் சாம்பல் நிற பேண்டும் சீருடையாக இருக்கும். வரும் 15.11.2026 முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சீருடையை பணிநேரத்தில் கட்டாயமாக அணிய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.