நாளை கோவை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் - டிரோன்கள் பறக்க தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நாளை கோவை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் - டிரோன்கள் பறக்க தடை

நாளை கோவை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் - டிரோன்கள் பறக்க தடை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் அவர், கோவை விமான நிலையத்தை வந்தடைய உள்ளார். அவரை கலெக்டர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். துணை ஜனாதிபதியின் கோவை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி ஊர்திகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் வருகிற 22-ந் தேதி காலை 11 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன், காளப்பட்டி 4 ரோடு சந்திப்பு, கோவில்பாளையம், அன்னூர் பஸ் நிலையம், தென்திருப்பதி 4 ரோடு ஆகிய இடங்களிலும் டிரோன் பறக்க தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், வனக்கல்லூரி விருந்தினர் இல்லம், குஞ்சப்பனை மாவட்ட எல்லை, கஞ்சப் பள்ளி, கரியம்பாளையம் சந்திப்பு, கணியூர் சுங்கச்சாவடி, நீலாம்பூர் ஆகிய பகுதிகளும் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனுடன் சிங்காநல்லூர், பீளமேடு, சித்ரா, நேரு நகர், சேரன்மாநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நவ இந்தியா, இருகூர் ஆகிய பகுதிகளிலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி டிரோன்கள் அல்லது பிற ஆளில்லா வான்வழி ஊர்திகளை இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.