நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும், அவர்களின் நலன் தொடர்பான பணிகளை ஆய்வு செய்யவும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இன்று நெல்லைக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து பாபநாசம் முண்டந்துறை பகுதியில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற டிரைவர் மணிகண்டனை மலைப்பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டு, அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் மணிகண்டன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.