நம் குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனைகளைப் படைக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நம் குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனைகளைப் படைக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி

நம் குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனைகளைப் படைக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி

குழந்தைகள் தங்களது கனவுகளை நனவாக்கி, அனைத்து துறைகளிலும் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் (தற்போது பிரயாக்ராஜ்) மோதிலால் நேரு - ஸ்வரூப் ராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நவீன இந்தியாவின் சிற்பி எனப் போற்றப்படும் அவரது பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் ஜவஹர்லால் நேருவை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், வண்ணமயமான கனவுகளுடன் வளர்ந்து வரும் குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும், அவர்களுக்கு அன்பும் சிறந்த வழிகாட்டுதலும் வழங்கி அவர்களின் எதிர்காலப் பயணத்தைச் சிறப்பாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் தனது இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.