நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்று, தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முதல்-அமைச்சர் விஜய் வருகை தருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற விஜய், பின்னர் காரில் ஏறி தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பசும்பொன்னில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குருபூஜையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். இந்தச் சூழலில் முதல்-அமைச்சர் அங்கு சென்றால் கூட்ட நெரிசல் அதிகரித்து பாதுகாப்புப் பிரச்சினைகள் உருவாகலாம் என உயர் போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாகவும், உளவுத்துறையும் இதே பரிந்துரையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பசும்பொன் செல்வதை விஜய் தவிர்த்ததாக தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.