நண்பர்களுடன் கடலில் குளித்தபோது விபத்து: மாணவி உயிரிழப்பு, மாணவரை தேடும் பணி தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

25 Jul 2026 www.thinathulir.com

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது விபத்து: மாணவி உயிரிழப்பு, மாணவரை தேடும் பணி தீவிரம்

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது விபத்து: மாணவி உயிரிழப்பு, மாணவரை தேடும் பணி தீவிரம்

சென்னையின் எண்ணூர் கடற்கரைக்கு இன்று தனியார் கல்லூரியில் பயிலும் ஐந்து மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக சென்றிருந்தனர். அப்போது அவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பெரிய அலையில் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவரும் சிக்கினர்.அலை அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றதைத் தொடர்ந்து, அருகிலிருந்த மீனவர்களும் அவர்களுடன் வந்த நண்பர்களும் இணைந்து இரண்டு மாணவிகளைமீட்டுகரைக்குகொண்டுவந்தனர்.பின்னர்அவர்கள்உடனடியாகமருத்துவமனைக்குஅனுப்பப்பட்டனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 18 வயதான கிருத்திகா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையில், ஆவடியைச் சேர்ந்த 20 வயதான ஆகாஷ் என்ற மாணவர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், அவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவர் மாயமானது எண்ணூர் கடற்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.