நடிகைகளை கவர்ச்சியாக காட்டிவிட்டு அவர்கள் மீது பழி போடுவது நியாயமில்லை: ரோஜா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நடிகைகளை கவர்ச்சியாக காட்டிவிட்டு அவர்கள் மீது பழி போடுவது நியாயமில்லை: ரோஜா

நடிகைகளை கவர்ச்சியாக காட்டிவிட்டு அவர்கள் மீது பழி போடுவது நியாயமில்லை: ரோஜா

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திராவைச் சேர்ந்த இவர், ‘செம்பருத்தி’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் தனது நடிப்பைத் தொடர்ந்தார். பின்னர் அரசியலில் நுழைந்த ரோஜா, ஆந்திர சட்டசபை உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பாரி இளவழகன் இயக்கி நடித்த ‘அன்பே டயானா’ படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் நேர்காணலில் கலந்து கொண்ட ரோஜா, தனது திரைப்பயணம் மற்றும் கதாபாத்திரத் தேர்வுகள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். திரைப்படங்களில் நடிகைகள் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுவது குறித்து பேசிய அவர், அதற்காக நடிகைகளை குறை கூறுவது சரியல்ல என்று தெரிவித்தார். ஒரு கதாபாத்திரத்தின் தோற்றம், ஆடை மற்றும் அதனை திரையில் காட்சிப்படுத்தும் விதம் ஆகியவை இயக்குநரின் கற்பனையையும் முடிவையும் சார்ந்தவை என்று கூறினார். இயக்குநரின் அறிவுறுத்தலின்படி செயல்படும் நடிகைகள் மீது பழி சுமத்துவதற்குப் பதிலாக, பெண்களை தவறான முறையில் சித்தரிக்கும் இயக்குநர்களிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் ரோஜா குறிப்பிட்டார். சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். நடிகர்களும் சமூகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மக்களுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றும் கூறினார். திரைத்துறையில் கிடைக்கும் புகழும் மக்கள் ஆதரவும் சமூகப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய வாய்ப்பாக அமையும் என்றும், அதை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்காக உழைப்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பாடல்களுக்கு நடனமாடுவது மட்டுமே நடிப்பு அல்ல என்றும் ரோஜா கூறினார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தி, தரமான கதைகளில் சிறப்பாக நடிப்பதே ஒரு நடிகையின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் என்றார். ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தில் தான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஆழமானதாகவும், ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெறும் வகையிலும் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.