நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலக்ஷ்மி ஹீரோயினாக அறிமுகம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Aug 2026 www.thinathulir.com

நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலக்ஷ்மி ஹீரோயினாக அறிமுகம்

நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலக்ஷ்மி ஹீரோயினாக அறிமுகம்

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நீண்ட காலமாக ரசிகர்களை கவர்ந்து வரும் ஊர்வசியின் மகள் தேஜாலக்ஷ்மி ஊர்வசி நாயர், கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.தேஜாலக்ஷ்மி, நடிகர் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக 'புல்லி' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் ஊர்வசியும் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கன்னட திரைப்பட உலகிற்கு மீண்டும் திரும்புகிறார்.மேலும், தாயும் மகளும் ஒரே கன்னட திரைப்படத்தில் இணைந்து திரையில் தோன்றுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், புவன் பொன்னண்ணாவின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்துள்ளார்.இயக்குநர் அனுப் ஆண்டனி இயக்கும் 'புல்லி' திரைப்படம் டார்க் காமெடி பாணியில் உருவாகி வருகிறது. தாய்–மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அச்சுத் குமார், ஓம் பிரகாஷ் ராவ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.