நடிகை அம்பிகா மீது செக் மோசடி புகார்.. காவல் ஆணையரகத்தில் ஆஜராகாத நடிகை ராதா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நடிகை அம்பிகா மீது செக் மோசடி புகார்.. காவல் ஆணையரகத்தில் ஆஜராகாத நடிகை ராதா

நடிகை அம்பிகா மீது செக் மோசடி புகார்.. காவல் ஆணையரகத்தில் ஆஜராகாத நடிகை ராதா

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். தற்போது இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருவதுடன், தொழில் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுமார் ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, புகார்தாரரான நடிகை ராதாவிடம் விரிவான வாக்குமூலம் பெறுவதுடன், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் பெறுவதற்காக இன்று நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற விசாரணைக்கு நடிகை ராதா நேரில் ஆஜராகவில்லை. தற்போது பணி காரணமாக வெளியூரில் இருப்பதாகவும், நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்குமாறும் அவரது தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ராதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நடிகை அம்பிகா மறுத்துள்ளார். குடும்ப சொத்து தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக ராதாவே தங்களிடம் அந்த காசோலைகளை வழங்கியதாக அம்பிகா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.