நடத்துனரை தற்கொலைக்கு தூண்டியதாக புகார்: கிளை மேலாளர் மீது நடவடிக்கை கோரி சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நடத்துனரை தற்கொலைக்கு தூண்டியதாக புகார்: கிளை மேலாளர் மீது நடவடிக்கை கோரி சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

நடத்துனரை தற்கொலைக்கு தூண்டியதாக புகார்: கிளை மேலாளர் மீது நடவடிக்கை கோரி சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு போக்குவரத்துக்கழக நடத்துனரை அவதூறாக பேசி, தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் கிளை மேலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் நகரப் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வரும் ஆறுமுகத்தை, கிளை மேலாளர் சுரேஷ் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், விடுப்பு வழங்குவதற்காக கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என வற்புறுத்தியதுடன், தொழிலாளர்களையும் அதிக நேரம் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை கண்டித்தும், கிளை மேலாளர் மீது துறைரீதியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் நகரப் பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.