நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை: சிரித்த ஒப்பந்ததாரரை எச்சரித்த அதிகாரி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை: சிரித்த ஒப்பந்ததாரரை எச்சரித்த அதிகாரி

நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை: சிரித்த ஒப்பந்ததாரரை எச்சரித்த அதிகாரி

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முறைகேடு மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அலுவலகத்தில் இருந்த கோப்புகள் சரிபார்க்கப்பட்டதுடன், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் சிரித்தபடியும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டும் இருந்ததாக தெரிகிறது. இதனை கவனித்த அதிகாரி, அந்த ஒப்பந்ததாரரைக் கடுமையாக எச்சரித்தார். அப்போது, “நீ என்ன ரொம்ப சிரிச்சிட்டு இருக்க? இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என அதிகாரி அவரைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.