நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி: வாலிபர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி: வாலிபர் கைது

நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி: வாலிபர் கைது

சென்னையில் நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் 40 வயது நபரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பூவலசந்திரன், பழைய தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். மேலும், அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டுத் தரும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்த சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் (40), பூவலசந்திரனை தொடர்பு கொண்டார். முதற்கட்டமாக 56 கிராம் தங்க நகைகளை மீட்டுத் தந்த பூவலசந்திரனிடம், மேலும் 100 கிராம் நகைகளை மீட்டுத் தருமாறு லோகேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பி பூவலசந்திரன் ஐ.சி.எப். பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த லோகேஷ், அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜமங்கலம் அருகே காரை நிறுத்தச் சொன்ன லோகேஷ், அடகு கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் திரும்பி வராமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஐ.சி.எப். போலீசார் லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், போலியான நகைக்கடை ரசீதை காண்பித்து ரூ.13 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து லோகேஷிடம் இருந்து ரூ.13 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.