நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு; பெண் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு; பெண் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்

நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு; பெண் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (50). பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்கரலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜபாளையம் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சங்கரலிங்கத்தின் வீட்டுக்குள் சென்று ஒரு பெண் நகை மற்றும் பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சங்கரலிங்கத்தின் வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி (40). சங்கரலிங்கத்துக்கு சகோதரி உறவு முறையான இவர், ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இந்த திருட்டு சம்பவத்தில் பாக்கியலட்சுமிக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், ஏட்டு பாக்கியலட்சுமியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திருட்டு சம்பவத்துடன் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக கருதப்பட்டதால், விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிர விசாரணை முடிவடைந்த பின்னரே, இந்த சம்பவத்தில் பாக்கியலட்சுமியின் பங்கு குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.