தோல்வியே இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா... தென் கொரியாவுடன் பலப்பரீட்சை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தோல்வியே இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா... தென் கொரியாவுடன் பலப்பரீட்சை

தோல்வியே இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா... தென் கொரியாவுடன் பலப்பரீட்சை

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஆக்கி தொடரில், இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது. ‘பி’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் மொத்தம் 66 கோல்களை அடித்து இந்திய வீராங்கனைகள் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் லீக் சுற்று முடிவுகள்: * உஸ்பெகிஸ்தான்:19-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி. * இந்தோனேசியா: 17-1 என்ற கோல் கணக்கில் வெற்றி. * தாய்லாந்து: 20-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி. * ஜப்பான் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி. * சிங்கப்பூர்: 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி. இதன் மூலம் ‘பி’ பிரிவில் இந்தியா தனது அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், ‘ஏ’ பிரிவில் விளையாடிய தென் கொரியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த அணி பிரிவு சுற்றில் முதலிடம் பிடித்த சீனாவிடம் மட்டும் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய மகளிர் ஆக்கி அணி கடைசியாக 1982-ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது. அதன் பின்னர் 44 ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இந்திய அணி போராடி வருகிறது.