தோனியுடன் உரையாடினேன்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நெகிழ்ச்சி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தோனியுடன் உரையாடினேன்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நெகிழ்ச்சி

தோனியுடன் உரையாடினேன்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நெகிழ்ச்சி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 352 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் தனது 21-வது ஒருநாள் சதத்தை பதிவு செய்து 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் இந்த ரன்களை எடுத்தார். குடகேஷ் மோட்டி 19 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஷாய் ஹோப், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் நடைபெற்ற உரையாடல் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “மிகச் சிறந்த வீரரான தோனியுடன் எனக்கு நல்ல உரையாடல் நடைபெற்றது. ‘நீ நினைப்பதைவிட உன்னிடம் எப்போதும் அதிக நேரம் இருக்கிறது’ என்று அவர் என்னிடம் கூறினார். அந்த அறிவுரையை மனதில் கொண்டு, இலக்கை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டமாகவும் அணுக முயற்சி செய்தோம்” என்றார்.