தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய விவகாரம்: மாற்றுத்திறனாளி கைதி முன்வைத்த திட்டம்! - ஐஜி விஜயேந்திர பிதரி விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய விவகாரம்: மாற்றுத்திறனாளி கைதி முன்வைத்த திட்டம்! - ஐஜி விஜயேந்திர பிதரி விளக்கம்

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய விவகாரம்: மாற்றுத்திறனாளி கைதி முன்வைத்த திட்டம்! - ஐஜி விஜயேந்திர பிதரி விளக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில், கடந்த 26-ம் தேதி இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் நுழைவாயில் வழியாகத் தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் மூன்று காவலர்கள் காயமடைந்தனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தப்பிச் சென்றவர்கள் தேனி, மதுரை, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களின் விவரங்கள் வருமாறு: தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (24), கம்பம் கோம்பை ரோட்டைச் சேர்ந்த சோலை முகிலேஸ்வரன் (28), மதுரை மாவட்டம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற மதன் (25), ராஜ்குமார் (20), காமராஜபுரத்தைச் சேர்ந்த திருப்பதி (23), டி.என்.எச்.பி. காலனியைச் சேர்ந்த பொன்முத்துச்செல்வம் (26), காந்திநகர் மேலமடையைச் சேர்ந்த பிரசாந்த் என்ற லிங்கபிரசாந்த் (25), ராஜா சிக்கந்தர் (24), கீழக்குயில்குடியைச் சேர்ந்த நிஷாந்த் (22), வாடிப்பட்டி முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த முத்து இளங்கோவன் (22), பெருங்குடி பர்மா காலனியைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (36), மேலஅனுப்பானடியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (25), சேலம் மாவட்டம் தடங்கப்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் (23), சிவகங்கை மாவட்டம் கீழக்கந்தானியைச் சேர்ந்த தருண்குமார் (25), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த பாண்டி செல்வம் (25), கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரத்தைச் சேர்ந்த ரெஜின் (24) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தப்பிச் சென்ற 17 பேர் மீதும் எட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 48 மணி நேரத்திற்குள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. தப்பிக்கும் திட்டத்தை வகுத்தது யார்? தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதரி புதிய தகவலைத் தெரிவித்துள்ளார். அவரது விளக்கத்தின்படி, மாற்றுத்திறனாளியான லிங்கபிரசாத் என்பவர்தான் சிறையில் இருந்து தப்பிப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளார். அவரது திட்டத்தைக் கேட்ட பிறகே மற்ற கைதிகள் தப்பிச் சென்றதாக ஐஜி விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார்.