தேசிய விருதை வென்ற தமிழ் ஆவணப்படம்; நெசவாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்த "லைப் இன் லூம்"
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

22 Jul 2026 www.thinathulir.com

தேசிய விருதை வென்ற தமிழ் ஆவணப்படம்; நெசவாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்த "லைப் இன் லூம்"

தேசிய விருதை வென்ற தமிழ் ஆவணப்படம்; நெசவாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்த "லைப் இன் லூம்"

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், லைப் இன் லூம் (Life in Loom) ஆவணப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதை வென்று கவனம் பெற்றுள்ளது. இந்த ஆவணப்படத்தை பல தமிழ்த் திரைப்படங்களை தயாரித்த மார்க் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் தமிழ், இந்தி, அசாமி, வங்காளம், லடாகி, ரெமோ மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. எட்மண்ட் ரான்சன் இயக்கத்துடன் ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ள நிலையில், பிரான்சிஸ் மார்கஸ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த ஆவணப்படம் இந்தியாவின் ஏழு மாநிலங்களில் வாழும் நெசவாளர்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் பாரம்பரிய கைத்தறி மரபுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பாரம்பரியமான பதன் படோலா நெசவு முதல், ஒடிசா மாநிலத்தின் போண்டா பழங்குடியினரின் ரிங்கா நெசவு வரை பல்வேறு நெசவு பாரம்பரியங்களை இதில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து இயக்குநர் எட்மண்ட் ரான்சன் கூறுகையில், வேகமாக மாறிவரும் சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சூழலிலும், பல நூற்றாண்டுகளாக தொடரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய நெசவு முறைகளை பாதுகாக்கும் கைவினைஞர்களின் உறுதியான முயற்சிகளை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், 85 நாட்களுக்கும் அதிகமாக பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த ஆவணப்படத்தில், பாரம்பரிய நெசவாளர்களின் வாழ்க்கை முறை, இயற்கையுடன் அவர்கள் கொண்டிருக்கும் நெருக்கமான உறவு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நெசவு தொழில்நுட்பங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.