திருநெல்வேலியின் பாரம்பரிய அடையாளங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள இருட்டுக்கடை அல்வாவுக்கு, 2026-ம் ஆண்டுக்கான Food Connoisseurs India Awards விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், “Best Sweet Shop of the Year (South)” என்ற விருதை இருட்டுக்கடை அல்வா பெற்றது. இந்த விருதை அதன் உரிமையாளர் கவிதா சிங் நேரில் பெற்றுக்கொண்டார். திருநெல்வேலியின் பாரம்பரிய சுவையை பல ஆண்டுகளாக தக்கவைத்து வரும் இருட்டுக்கடை அல்வா, பொதுமக்களிடம் தனிப்பட்ட வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிரத்யேக சுவையுடன், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதும் அதன் அடையாளமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகத்துக்கான விருது இருட்டுக்கடை அல்வாவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் திருநெல்வேலியின் பாரம்பரிய அல்வாவுக்கும், அதன் நீண்டகால சுவை மரபுக்கும் மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. டெல்லி விழாவில் விருதை பெற்றுக்கொண்ட கவிதா சிங்குக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலியின் பாரம்பரிய சுவைக்கு கிடைத்துள்ள இந்த தேசிய அளவிலான அங்கீகாரம், அந்த நகருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.