தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம்

தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம்

தமிழகத்தின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான தெருக்கூத்து மற்றும் அதனைத் தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ‘ஊர் கூடும் இரவு’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரம்யா ஸ்ரீராம், பாரம்பரியச் சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் கிராமியக் கலாச்சாரங்களைப் பதிவு செய்து வருகிறார். மயானக் கொள்ளை, குலசேகரன்பட்டினம் தசரா உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்கெனவே ஆவணப்படமாக உருவாக்கியுள்ள அவர், தற்போது தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம், தெருக்கூத்துக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மட்டும் பேசாமல், அவர்களின் கலைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் பாரம்பரியக் கலையின் தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இரவு முழுவதும் நடைபெறும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளையும், அவற்றைக் காண கிராம மக்கள் ஒன்றுகூடும் கலாச்சாரப் பின்னணியையும் இப்படம் காட்சிப்படுத்துகிறது. இந்த ஆவணப்படத்தின் சிறப்புத் திரையிடலும் பத்திரிகையாளர் சந்திப்பும் அண்மையில் சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றன. இப்படத்திற்கு அருண் சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானி இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம், சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது. இதுகுறித்து இயக்குநர் ரம்யா ஸ்ரீராம் கூறுகையில், தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது என்றும், அவர்களுடன் நெருக்கமாகப் பழகியபோதுதான் அவர்களின் வாழ்வை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது என்றும் தெரிவித்தார். மேலும், அவர்கள் அனுபவிக்கும் வலிகளை ஆவணப்படத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் படைப்பை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.