தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித்ஷா நாளை சென்னை வருகை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித்ஷா நாளை சென்னை வருகை

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித்ஷா நாளை சென்னை வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் நாளை இரவு சென்னை வருகிறார். சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.தென் மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநிலங்களின் பாதுகாப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.