தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், 272 விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி மீன்பிடி துறைமுக முன்னாள் தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்திபனின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதையொட்டி, துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் இயக்கப்படாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.