தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ‘கலசல்’ வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து, விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மூலம் தினமும் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக கடலில் பிடிக்கப்படும் ‘கலசல்’ வகை மீன்களுக்கு துறைமுகத்தில் போதிய விலைகிடைப்பதில்லைஎனமீனவர்கள்தெரிவித்துள்ளனர்.மீன்பிடிக்கச் செல்வதற்கான டீசல் செலவு மற்றும் பணியாளர்களுக்கான கூலி உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைக்கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் இணைந்து இன்று ஒருநாள் கடலுக்குச்செல்லவேண்டாம்எனமுடிவுசெய்தனர்.இதன்காரணமாகதூத்துக்குடிமீன்பிடிதுறைமுகத்தைச்சேர்ந்த272விசைப்படகுகளும்கடலுக்குச்செல்லாமல்துறைமுகத்தில்வரிசையாகநிறுத்தப்பட்டுள்ளன.மீனவர்களின்திடீர்வேலைநிறுத்தத்தால் மீன் விற்பனை மற்றும் ஏல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் இன்று ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.