தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம்; 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

22 Jul 2026 www.thinathulir.com

தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம்; 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம்; 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவின்படி, திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி. எம். விஜயலட்சுமி, சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி எஸ்.பி. டி. சண்முகபிரியா, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையின் மேற்கு சரக எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.அதேபோல், ராமேஸ்வரம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பி.ஆர். மீரா, சென்னை காவல்துறை தலைமையகத்தின் கணினி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதனுடன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.