தூத்துக்குடி: கோவிலில் ‘ரீல்ஸ்’ எடுத்த தவெக பெண் நிர்வாகி மீது புகார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தூத்துக்குடி: கோவிலில் ‘ரீல்ஸ்’ எடுத்த தவெக பெண் நிர்வாகி மீது புகார்

தூத்துக்குடி: கோவிலில் ‘ரீல்ஸ்’ எடுத்த தவெக பெண் நிர்வாகி மீது புகார்

செல்போன் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கோவில்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த தேவி, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மகளிரணி நிர்வாகியாக உள்ளார். இவர் அப்பகுதியில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி சில நாட்களுக்கு முன்பு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தேவி சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வது, பிரகாரத்தைச் சுற்றி வருவது, நவக்கிரக சன்னதியை வலம் வருவது உள்ளிட்ட காட்சிகளை செல்போனில் ‘ரீல்ஸ்’ வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, விளாத்திகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு விளாத்திகுளத்தைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணும் தனது பிறந்தநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தது தொடர்பான இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.