தூத்துக்குடி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தூத்துக்குடி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (ADJ-II) தீர்ப்பளித்துள்ளது.ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவலெட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (33) என்பவர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (31), ஞானசேகர் (29), அந்தோணிராஜ் (30), குணசிங் (26) மற்றும் சந்தியப்பன் (50) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி ADJ-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா, 5 பேரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.