தூத்துக்குடி: கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தூத்துக்குடி: கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை

தூத்துக்குடி: கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை

தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதிய துறைமுக முகத்துவாரத்திற்கு சற்று தெற்குப் பகுதியில் கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீனவர் காலனி கடலோரக் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, கடலில் மிதந்த சடலத்தை மீட்டனர்.பின்னர், மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சடலமாக மீட்கப்பட்ட நபரின் பெயர், வயது மற்றும் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட அடையாள விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கடலோரக் காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர் யார், அவர் எந்தச் சூழலில் கடலில் விழுந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.