தூத்துக்குடி அருகே முன்பகை காரணமாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தூத்துக்குடி அருகே முன்பகை காரணமாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி அருகே முன்பகை காரணமாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இரு குடும்பங்களுக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வந்த முன்விரோதம் மோதலாக வெடித்ததில், 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் பகுதியில் மாரியப்பன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இடையே, வீட்டு வாசல் முன்பு கழிவுநீர் செல்வது தொடர்பாக முதலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை நாளடைவில் இரு தரப்பினருக்கும் இடையே முன்பகையாக மாறியது. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் மக்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, பழைய பிரச்சினை தொடர்பாக மாரியப்பன் குடும்பத்தினருக்கும் சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்ததால் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் மாரியப்பனின் மகனும், 20 வயது கல்லூரி மாணவருமான இசக்கிராஜா வெட்டுக் காயமடைந்தார். பலத்த காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இசக்கிராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ