துவரம் பருப்பு கொள்முதல்: ரூ.187 கோடி மிச்சப்படுத்திய தவெக அரசு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

துவரம் பருப்பு கொள்முதல்: ரூ.187 கோடி மிச்சப்படுத்திய தவெக அரசு

துவரம் பருப்பு கொள்முதல்: ரூ.187 கோடி மிச்சப்படுத்திய தவெக அரசு

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய ஆட்சிக் காலத்தைவிட குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் ரூ.187 கோடி செலவை குறைத்துள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் துவரம் பருப்பும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு துவரம் பருப்பை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் துவரம் பருப்பை குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் ரூ.187 கோடி அளவுக்கு செலவு குறைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் அதே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், முந்தைய கொள்முதல் விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோவுக்கு ரூ.31 குறைவாக செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்காக ரூ.654 கோடி செலவிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.467 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.187 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், துவரம் பருப்பின் தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.