துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

14 Sep 2026 www.thinathulir.com

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் அவரது 4-வது திரைப்படத்திற்கு ‘ஜாக்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்தார். இதையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. குறிப்பாக, துருவ் விக்ரமின் நடிப்பும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. தற்போது துருவ் விக்ரம் தனது 4-வது படமான ‘DV4’-ல் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துருவ் விக்ரமும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதல்முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் கரண் ஏ. குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில், ‘DV4’ படத்தின் தலைப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்திற்கு ‘ஜாக்கி’ (JACKIE) என பெயரிடப்பட்டுள்ளது. ரொமாண்டிக்-ஆக்சன் பாணியில் உருவாகும் இப்படம் முழுமையான கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.