துப்பாக்கிச்சூடு முதல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அத்துமீறல் வரை... உதயநிதி கடும் கண்டனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

துப்பாக்கிச்சூடு முதல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அத்துமீறல் வரை... உதயநிதி கடும் கண்டனம்

துப்பாக்கிச்சூடு முதல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அத்துமீறல் வரை... உதயநிதி கடும் கண்டனம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், தமிழக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சரின் நடவடிக்கைகளையும் விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அத்துமீறல்களையும் முதலமைச்சர் எப்போது கட்டுப்படுத்தப் போகிறார்? இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கண்டு தமிழகமே அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அவற்றை பண்டிகைக் கால கொலைகள் என்று அரசு கூறுவது கண்டனத்துக்குரியது. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக்கூட காவல்துறை, 'எரியும் பொருள்' வீசப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. குற்றச் சம்பவங்களை மறைப்பதற்காக அரசு பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தனியாக ஒரு அகராதியே உருவாக்கலாம். தேனியில் காவலர் கொல்லப்பட்ட விவகாரத்திலும் முதலமைச்சரும், காவல்துறையும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். காவலர் பணியில் இருந்தபோது கொல்லப்பட்டதாக முதலமைச்சரும், பணியில் இல்லாத நேரத்தில் கொல்லப்பட்டதாக காவல்துறையும் தெரிவிப்பது முரண்பாடாக உள்ளது. மேலும், மிரட்டல், தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து, கமிஷன் வசூல், பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் செயல்களால் பொதுமக்கள் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வரை பலரும் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய சம்பவங்கள் குறித்து எந்தப் பதிலும் அளிக்காமல், பொறுப்பேற்காமலும் முதலமைச்சர் அமைதியாக இருப்பதாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், உடனடியாக விழித்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.