துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானம் சவுதியில் தரையிறக்கம் - பரபரப்பு சம்பவம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானம் சவுதியில் தரையிறக்கம் - பரபரப்பு சம்பவம்

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானம் சவுதியில் தரையிறக்கம் - பரபரப்பு சம்பவம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட ஏர் துபாய் விமானம், எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானம் சவுதி அரேபியா - ஜோர்டான் வான் எல்லைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கேப்டனுக்கும் துணை கேப்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் கேப்டனை துணை கேப்டன் கத்தியால் தாக்கியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. மேலும், விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரையில் மோதச் செய்து விபத்தை ஏற்படுத்த துணை கேப்டன் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பயணிகளின் உதவியுடன் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கேப்டன், சவுதி அரேபியாவில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் உடையில் இருந்த சில விமானிகளும் விமானத்தை பத்திரமாக தரையிறக்க உதவியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் கேப்டன் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் என்றும், தாக்குதல் மற்றும் விமானத்தை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் துணை கேப்டன் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் இஸ்ரேல் தரப்பு எழுப்பியுள்ளது. அதேநேரத்தில், இது பயங்கரவாத முயற்சியா அல்லது விமானிகளுக்கு இடையேயான தனிப்பட்ட மோதலால் ஏற்பட்ட சம்பவமா என்பது குறித்து இஸ்ரேல் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாற்று விமானம் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்ல ஏர் துபாய் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.