துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம்

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம்

இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு பயணமாக நாளை செல்கிறார்.இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் ஸ்ரீ விஜயபுரம் செல்லும் அவர், அங்குள்ள செல்லுலார் சிறையில் அமைந்துள்ள தேசிய நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்த உள்ளார். அதன்பின், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் பார்வையிடுகிறார்.பயணத்தின் இரண்டாவது நாளில், ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் உள்ள பிளாக் பாயிண்ட்டில் தேசியக் கொடியை துணை ஜனாதிபதி ஏற்றுகிறார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் டெல்லி திரும்புகிறார்.