தீவிர சிகிச்சைப் பிரிவில் மகிந்த ராஜபக்சே அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தீவிர சிகிச்சைப் பிரிவில் மகிந்த ராஜபக்சே அனுமதி

தீவிர சிகிச்சைப் பிரிவில் மகிந்த ராஜபக்சே அனுமதி

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே (80), உடல்நலக் குறைவு காரணமாக அவசர சிகிச்சைக்காக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்பு குறித்தோ, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியோ இதுவரை விரிவான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2005 முதல் 2015 வரை அதிபராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்சே, அதன்பிறகு பிரதமராகவும் பணியாற்றியுள்ளார். அந்நாட்டு அரசியலில் நீண்டகாலமாக முக்கிய செல்வாக்கு கொண்டிருந்த இவர், 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது அதிபராக இருந்தார். இதற்கிடையே, 2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு குறையத் தொடங்கியது. தற்போது அதிபர் அநுர குமார திசாநாயக தலைமையிலான அரசு, முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், மகிந்த ராஜபக்சேவின் மகன் மற்றும் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.