தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Aug 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Aug 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்ட அறிவிப்பில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறைக்கு ஈடாக, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் 22-ஆம் தேதி செயல்படும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும், முன்கூட்டியே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராததால், வங்கிகளுக்கு இது பொருந்தாது என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கியுள்ளது.