தீபாவளி ரிலீஸ்: 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசர் வெளியானது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

14 Sep 2026 www.thinathulir.com

தீபாவளி ரிலீஸ்: 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசர் வெளியானது

தீபாவளி ரிலீஸ்: 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசர் வெளியானது

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘ரைஸ் ஆப் மஹாசக்தி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரில் பிரமாண்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரமாண்ட காட்சிகளுடன் உருவாகியுள்ள டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.