தீபாவளி பண்டிகை: நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தீபாவளி பண்டிகை: நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகை: நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வரும் திங்கட்கிழமை அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களுக்கும் கூடுதலாக நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றப் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 28ஆம் தேதி மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படும். அதேபோல், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை டிசம்பர் 12ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக, நவம்பர் 21, 2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.