தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி, சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நானி, கடந்த 2008-ம் ஆண்டு மோகன கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘அஷ்டா சம்மா’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, 2011-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் வெளியான ‘வெப்பம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பின்னர், 2012-ம் ஆண்டு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நானிக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. தனது இயல்பான நடிப்பின் காரணமாக ரசிகர்களால் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்று நானி அழைக்கப்படுகிறார்.‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’, ‘தசரா’, ‘ஹாய் நான்னா’, ‘சூர்யாவின் சனிக்கிழமை’, ‘ஹிட் 3’ உள்ளிட்ட அவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.இந்நிலையில், திரைத்துறையில் தனது 18 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு நானி சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், சினிமாவில் தனது பயணம் தற்போது 18 ஆண்டுகளை எட்டியுள்ளதாகவும், திரைத்துறையில் அதிகாரப்பூர்வமாகவயதுவந்தவராகிவிட்டதாகவும்நகைச்சுவையாககுறிப்பிட்டுள்ளார்.மேலும், ரசிகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் அன்பை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதில்லை என்றும், இனியும் அவ்வாறு செய்யப் போவதில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.