திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நேற்று இரவு முதல் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுமார் 4 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி பௌர்ணமி திதி நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.06 மணிக்கு தொடங்கியது. இதனுடன் வார இறுதி விடுமுறையும் சேர்ந்ததால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். பௌர்ணமி கிரிவலம் தொடங்கியதையடுத்து, 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் விடிய விடிய பக்தி முழக்கங்களுடன் நடந்து சென்றனர். இன்று (சனிக்கிழமை) இரவு 10.18 மணி வரை பௌர்ணமி திதி இருப்பதால், தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசிக்க பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.