திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் எரிவாயு நுகர்வோரின் குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில், குறைதீர்வு கூட்டம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. திருவண்ணாமலை தாலுகா அலுவலக கூட்டரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகிக்கிறார். திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு மற்றும் கீழ்பென்னாத்தூர் தாலுகாக்களை சேர்ந்த எரிவாயு நுகர்வோர் இதில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம். மேலும், கூட்டத்தில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் மற்றும் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வம் தெரிவித்துள்ளார்.