திருவண்ணாமலை: கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருவண்ணாமலை: கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை: கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சிலிண்டர்கள் மண் தரையில் உருண்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அமைந்துள்ள படவேடு ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு படவேட்டில் செயல்பட்டு வரும் தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை கிராம மக்களுக்கு விநியோகிப்பதற்காக கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று புறப்பட்டது. அர்ஜுனாபுரம் - நொளம்பூர் கிராமச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அதிக பாரம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். மினிவேனில் இருந்த சிலிண்டர்கள் மண் தரையில் உருண்டு சென்றதால் தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பொதுமக்கள் உருண்டு சென்ற சிலிண்டர்களை சேகரித்து ஒரே இடத்தில் வரிசையாக அடுக்கி வைத்தனர். இதையடுத்து, மீட்பு எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த மினிவேன் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சிலிண்டர்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.