திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம்

திரைப்பட நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி, தனது மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் வழிபாடு மேற்கொண்ட அவர், நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார்.அப்போது ஆன்மீகச் சுற்றுலாவுக்காக கோயிலுக்கு வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர், ஆர்.ஜே.பாலாஜியை அடையாளம் கண்டுகொண்டனர். அவரை அணுகி அன்புடன் பேசிய அவர்கள், அவருடன் இணைந்து ஆர்வத்துடன் செல்பி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தரிசனம் முடிந்து கோயிலில் இருந்து வெளியே வந்த ஆர்.ஜே.பாலாஜியிடம், அவரது அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல், பக்தி உணர்வுடன் "ஓம் நமசிவாய" என்று கூறியபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.