திருமலை வையாவூர் பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருமலை வையாவூர் பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம்

திருமலை வையாவூர் பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருமலை வையாவூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சாமி தரிசனம் செய்தார். ‘தென் திருப்பதி’ என்றும் ‘குட்டி திருப்பதி’ என்றும் அழைக்கப்படும் இக்கோவில் முக்கியமான இந்து வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வந்த அமைச்சர் ராஜ்மோகன், மற்ற பக்தர்களுடன் வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டார்.