திருப்பூர் குமரன் பிறந்ததினம் - நயினார் நாகேந்திரன் புகழாரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பூர் குமரன் பிறந்ததினம் - நயினார் நாகேந்திரன் புகழாரம்

திருப்பூர் குமரன் பிறந்ததினம் - நயினார் நாகேந்திரன் புகழாரம்

திருப்பூர் குமரன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி, நாட்டின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த வீரத் தியாகி திருப்பூர் குமரனின் பிறந்தநாள் இன்று என்று குறிப்பிட்டுள்ளார். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது இளமைப் பருவத்தையே அர்ப்பணித்த அவரது தியாகம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் என்றும் நிலைத்திருக்கும் நினைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி வீர மரணம் அடைந்ததால், திருப்பூர் குமரன் ‘கொடிகாத்த குமரன்’ என போற்றப்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கையும் வீர வரலாறும் தேசப்பற்று, துணிவு மற்றும் தியாகத்தின் அடையாளமாக திகழ்வதுடன், இன்றைய தலைமுறைக்கு நாட்டுப்பற்றை கற்றுத்தரும் சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். திருப்பூர் குமரனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என்றும், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பணித்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றி, வலிமையான பாரதத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.