திருப்பூர்: ஆக்சிஜன் தீர்ந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - உறவினர்கள் சாலை மறியல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பூர்: ஆக்சிஜன் தீர்ந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர்: ஆக்சிஜன் தீர்ந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதான விக்னேஷ், பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சுமார் 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே வந்த மான் மோதியதில் விக்னேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று ஸ்கேன் பரிசோதனைக்காக விக்னேஷை அழைத்துச் சென்றபோது ஆக்சிஜன் தீர்ந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது விக்னேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டிய விக்னேஷின் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள், மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.