திருப்புல்லாணியில் வேதாந்த தேசிகர் 758-வது அவதார தின விழா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்புல்லாணியில் வேதாந்த தேசிகர் 758-வது அவதார தின விழா

திருப்புல்லாணியில் வேதாந்த தேசிகர் 758-வது அவதார தின விழா

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் அருகே பழமையான சிறப்பு பெற்ற ஆண்டவன் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு பகவத் ராமானுஜருக்குப் பிறகு தோன்றிய முக்கிய வைணவ ஆச்சாரியரான வேதாந்த தேசிகரின் 758-வது அவதார தின விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. திருப்பதி சீனிவாச பெருமாளின் திருமணி அவதாரமாகவும், ஹயக்ரீவர் பெருமாளின் முழுமையான அனுக்கிரகத்தைப் பெற்றவராகவும் போற்றப்படும் வேதாந்த தேசிகரின் அவதார தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை மற்றும் கோஷ்டி பாராயணம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு 11 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும், திவ்ய பிரபந்தம் மற்றும் தேசிக பாடல்களைப் பாடியபடி திருப்புல்லாணியின் நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் இருந்து மகா தேசிகன் சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.